தொடக்கம் |
|
|
இரண்டாம் தந்திரம் 5. பிரளயம் |
1 | கருவரை மூடிக் கலந்து எழும் வெள்ளத்து இருவரும் கோ என்று இகல இறைவன் ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி அருவரையாய் நின்று அருள்புரிந்தானே. |
|
உரை
|
|
|
|
|
2 | அலை கடல் ஊடு அறுத்து அண்டத்து வானோர் தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே. |
|
உரை
|
|
|
|
|
3 | தண் கடல் விட்டது அமரரும் தேவரும் எண் கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர் விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம் கண் கடல் செய்யும் கருத்து அறியாரே. |
|
உரை
|
|
|
|
|
4 | சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி அமைக்க வல்லார் இவ் உலகத்து உளாரே திகைத் தெண் நீரில் கடல் ஒலி ஓசை மிகைக் கொள அங்கி மிகாமை வைத்தானே. |
|
உரை
|
|
|
|
|
5 | பண்பழி செய் வழி பாடு சென்று அப்புறம் கண் பழியாத கமலத்து இருக்கின்ற நண்பழி யாளனை நாடிச் சென்று அச்சிரம் விண் பழியாத விருத்தி கொண்டானே. |
|
உரை
|
|
|
|