இரண்டாம் தந்திரம்

7. எலும்பும் கபாலமும்

1எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே.
உரை