இரண்டாம் தந்திரம்

11. அழித்தல்

1அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கி அவ் ஈசற்குக் கை அம்பு தானே.
உரை
   
2இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்த
நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேன் ஆல்
உலை தந்த மெல்லரி போலும் உலகம்
மலை தந்த மா நிலம் தான் வெந்ததுவே.
உரை
   
3பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதம் செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே.
உரை
   
4கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி
ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புறக்
குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே.
உரை
   
5நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே.
உரை
   
6நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல்
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே.
உரை
   
7நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால்
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல்
சுத்த சங்காரம் அதீதத்துள் தோய் உறல்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே.
உரை
   
8நித்த சங்காரமும் நீடு இளைப் பாற்றலின்
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள்
உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே.
உரை
   
9பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப் பாழ் பாழ் ஆகா
வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம்
பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.
உரை
   
10தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர் வார வைத்தானே.
உரை