இரண்டாம் தந்திரம்

17. அபாத்திரம்

1கோல வறட்டைக் குனிந்து குளகு இட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே.
உரை
   
2ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி
ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு
ஈவ பெரும் பிழை என்று கொளீரே.
உரை
   
3ஆம் ஆறு அறியான் அதி பஞ்சபாதகன்
தோம் ஆறும் ஈசற்கும் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதம் கற்கவே.
உரை
   
4மண் மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சா தார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
உரை