இரண்டாம் தந்திரம்

23. மகேசுர நிந்தை

1ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம் தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே.
உரை
   
2ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம்
போன பொழுதே புகும் சிவ போகமே.
உரை