தொடக்கம் |
|
|
இரண்டாம் தந்திரம் 25. பெரியாரைத் துணைக்கோடல் |
1 | ஓடவல்லார் தமரோடு நடா வுவன் பாடவல்லார் ஒளி பார்மிசை வாழ்குவன் தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரான் ஒடும் கூட வல்லார் அடி கூடுவன் யானே. |
|
உரை
|
|
|
|
|
2 | தாம் இடர்ப் பட்டுத் தளிர் போல் தயங்கினும் மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும் நீ இடர்ப் பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே போம் இடத்து என்னொடும் போது கண்டாயே. |
|
உரை
|
|
|
|
|
3 | அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை நெறிதான் மிக மிக நின்று அருள் செய்யும் பெரியாருடன் கூடல் பேர் இன்பம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | தார் சடையான் தன் தமராய் உலகினில் போர் புகழான் எந்தை பொன்னடி சேருவார் வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும் கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | உடையான் அடியார் அடியாருடன் போய் படையார் அழல் மேனிப் பதி சென்று புக்கேன் கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப உடையான் வருக என ஓலம் என்றாரே. |
|
உரை
|
|
|
|
|
6 | அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும் பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும் உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும் இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே. |
|
உரை
|
|
|
|