மூன்றாம் தந்திரம்

1. அட்டாங்க யோகம்

1உரைத்தன வல்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரை முறை எண்ணிப்
பிரைச் சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே.
உரை
   
2செய்த இயம நியமம் சமாதி சென்று
உய்யப் பராசத்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரை செய்வன் இந்நிலை தானே.
உரை
   
3அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத்
தன் நெறி சென்று சமாதியிலே நின்மின்
நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே.
உரை
   
4இயம நியமமே எண் இலா ஆதனம்
நயம் உறு பிரணா யாமம் பிரத்தி ஆகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயம் உறும் அட்டாங்கம் ஆவது ஆமே.
உரை