மூன்றாம் தந்திரம்

3. நியமம்

1ஆதியை வேதத்தின் அப் பொருளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன்
நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே.
உரை
   
2தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை
காமம் களவு கொலை எனக் காண்பவை
நேமி ஈர் ஐந்து நியமத்தன் ஆமே.
உரை
   
3தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து
நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே.
உரை