மூன்றாம் தந்திரம்

9. சமாதி

1சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான் எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படும் தானே.
உரை
   
2விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்
அந்தம் இலாத அறிவின் அரும் பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.
உரை
   
3மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே.
உரை
   
4விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டு உணர்வாகக் கருதி இருப்பார்கள்
செண்டு வெளியில் செழும் கிரியத்து இடை
கொண்டு குதிரை குசை செறுத்தாரே.
உரை
   
5மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்ட பின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.
உரை
   
6மண்டலம் ஐந்து வரைகளும் ஈர் ஆறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
உரை
   
7பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத்
தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.
உரை
   
8உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார்
அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார்
திருவரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே.
உரை
   
9நம்பனை ஆதியை நால் மறை ஓதியைச்
செம் பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கிப் போய்க்
கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே.
உரை
   
10மூலத்து மேல் அது முச்சதுரத்து
காலத் திசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.
உரை
   
11கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேர் ஒளிப்
பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத்
தற்பரம் ஆகத் தகும் தண் சமாதியே.
உரை
   
12தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்
வலைப் பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
குலைப் பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப் பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே.
உரை
   
13சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகும் ஆல்
ஆதிப் பிரமன் பெரும் கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.
உரை
   
14சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில்
சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே.
உரை