மூன்றாம் தந்திரம்

11. அட்டமா சித்திபரகாயப் பிரவேசம்

1பணிந்து எண்திசையும் பரமனை நாடித்
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்து எண் திசை சென்று தாபித்த வாறே.
உரை
   
2பரிசு அறி வானவர் பண்பன் அடி எனத்
துரிசு அற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி
பெரியது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.
உரை
   
3குரவன் அருளில் குறிவழி மூலன்
பரையின் மணம்மிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே.
உரை
   
4காயாதி பூதம் கலை கால மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே
ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.
உரை
   
5இருபதினாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.
உரை
   
6மதி தனில் ஈர் ஆறாய் மன்னும் கலையின்
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டுப்
பதியும் ஈர் ஆறு ஆண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈர் ஆறு சித்திகள் ஆமே.
உரை
   
7நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈர் ஆறே.
உரை
   
8ஏழ் ஆனதில் சண்ட வாயுவின் வேகி ஆம்
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்
சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன் பதிற்றான் பர காயமே.
உரை
   
9ஈர் ஐந்தில் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர் ஒன்று பன் ஒன்றில் ஈர் ஆறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈர் ஆறே.
உரை
   
10தானே அனுவும் சகத்துத்தன் நொய்ம்மையும்
மானாக் கனமும் பரகாயத்து ஏகமும்
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே.
உரை
   
11தாங்கிய தன்மையும் தான் அணுப் பல் உயிர்
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கு
ஓங்கி வர முத்தி முந்தியவாறே.
உரை
   
12முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாய் இடச்
சிந்தை செயச் செய மண் முதல் தேர்ந்து அறிந்து
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே.
உரை
   
13சித்தம் திரிந்து சிவ மயம் ஆகிய
முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.
உரை
   
14ஒத்த இவ் ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ் ஒன்பதின் மிக்க தனம் செயன்
ஒத்த இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.
உரை
   
15இருக்கும் தனம் செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்று ஆய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே.
உரை
   
16வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.
உரை
   
17கண்ணில் வியாதி ரோகம் தனஞ் செயன்
கண்ணில் இவ் வாணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.
உரை
   
18நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர் விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே.
உரை
   
19ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார் கட்கு
ஒன்பது காட்சி இலை பல ஆமே.
உரை
   
20ஓங்கிய அங்கிக் கீழ் ஒண் சுழுனைச் செல்ல
வாங்கி இரவி மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட
ஆங்கு அது சொன்னோம் அருவழி யோர்க்கே.......
உரை
   
21தலைப் பட்ட வாறு அண்ணல் தையலை நாடி
வலைப் பட்ட பாசத்து வன் பிணை மான் போல்
துலைப் பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே.
உரை
   
22ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.
உரை
   
23கட்டி இட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டு இட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டி இட்டு நின்று களம் கனி ஊடுபோய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.
உரை
   
24பூரண சத்தி எழுமூன்று அறை ஆக
ஏர் அணி கன்னியர் எழு நூற்று அம் சாக்கினார்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.
உரை
   
25விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார் முதல் பூதம்
இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே.
உரை
   
26இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடை படு வாயுவும் மாறியே நிற்கும்
தடை அவை ஆறு ஏழும் தண் சுடர் உள்ளே
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே.
உரை
   
27ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதன் உள்
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே
நடம் கொண்ட கூத்தனும் நாடு கின்றானே.
உரை
   
28நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன் சென்று அத் திருவினைக் கைக் கொண்டு
பாடி உள் நின்ற பகைவரைக் கட்டி இட்டு
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே.
உரை
   
29அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பாகாயம் ஏவல்
அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே.
உரை
   
30எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடு நாடி மூலத்தன் அல் பானு
விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே.
உரை
   
31சித்திகள் எட்டு அன்றிச் சேர் எட்டியோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை
சத்தி அருள் தரத் தான் உள ஆகுமே.
உரை
   
அணிமா
32எட்டு இவை தன்னோடு எழில் பரம் கை கூடப்
பட்டவர் சித்தர் பர லோகம் சேர்தலால்
இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே.
உரை
   
33மந்திரம் ஏறு மதி பானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடு அற வல்லார்க்குத்
தந்து இன்றி நல் காமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே.
உரை
   
34முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும்
தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.
உரை
   
லகிமா
35ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலது ஆய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்றதை ஆண்டின் மால் அகு ஆகுமே.
உரை
   
36மால் அகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப் பொருள் காணுமே.
உரை
   
மகிமா
37மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன்
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்
கைப் பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்
மைப் பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே.
உரை
   
38ஆகின்ற கால் ஒளி ஆவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
மேல் நின்ற காலம் வெளி உற நின்றன
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே.
உரை
   
39தன்வழி ஆகத் தழைத்திடும் ஞானமும்
தன் வழி ஆகத் தழைத்திடும் வையகம்
தன் வழி ஆகத் தழைத்த பொருள் எல்லாம்
தன் வழி தன் அருள் ஆகி நின்றானே.
உரை
   
பிராத்தி
40நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே.
உரை
   
கரிமா
41ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
ஏகின்ற காலம் வெளிஉற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லைஏ.
உரை
   
42போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி
யாவதும் இல்லை அறிந்து கொள்வார்க்கே.
உரை
   
43அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
பறிந்தது பூதப் படை அவை எல்லாம்
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகயம் மேவலும் ஆமே.
உரை
   
பிராகாமியம்
44ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர்
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர்
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார் கட்கு
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே.
உரை
   
ஈசத்துவம்
45நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே.
உரை
   
46ஆகின்ற சந்திரன் தன் ஒளி ஆய் அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே.
உரை
   
47தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன் எனும் தன்மயன் ஆமே.
உரை
   
48தன்மை அது ஆகத் தழைத்த கலையின் உள்
பன்மை அது ஆகப் பரந்த ஐம் பூதத்தை
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் காணுமே.
உரை
   
வசித்துவம்
49மெய்ப் பொருள் ஆக விளைந்தது ஏது எனின்
நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம்
கைப் பொருள் ஆகக் கலந்த உயிர்க்கு எல்லாம்
தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே.
உரை
   
50தன்மை அது ஆகத் தழைத்த பகலவன்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் கண்டிடின்
பொன்மை அது ஆகப் புலன்களும் போயிட
நன்மை அது ஆகிய நல்கொடி காணுமே.
உரை
   
51நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன்
அக் கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டு
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே.
உரை
   
52காமரு தத்துவம் ஆனது வந்தபின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மா மரு உன் இடை மெய்த் தடுமானன் ஆய்
நா மருவும் ஒளி நாயகம் ஆனதே.
உரை
   
53நாயகம் ஆகிய நல் ஒளி கண்டபின்
தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும்
போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின்
பேய் அகம் ஆகிய பேர் ஒளி காணுமே.
உரை
   
54பேர் ஒளி ஆகிய பெரிய அவ் வேட்டையும்
பார் ஒளி ஆகப் பதைப்பு அறக் கண்டவன்
தார் ஒளி ஆகத் தரணி முழுதும் ஆம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே.
உரை
   
55காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்
கால் அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும்
கால் அது வேண்டிக் கொண்ட இவ் ஆறே.
உரை
   
56ஆறது ஆகும் அமிர்தத் தலையின் உள்
ஆறது ஆயிர முந்நூற்று தொடைஞ்சு உள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆக வளர்ப்பது இரண்டே.
உரை
   
57இரண்டின் மேலே சதா சிவ நாயகி
இரண்டது கால் கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.
உரை
   
58அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.
உரை
   
59ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
ஒன்று அது கால் கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்று அது வென்றி கொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே.
உரை
   
60முன் எழும் அக் கலை நாயகி தன்னுடன்
முன் உறு வாயு முடிவகை சொல்லிடின்
முன் உறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சும் ஆய்
முன் உறு வாயு முடி வகை ஆமே.
உரை
   
61ஆய் வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய் வரும் ஐஞ்ஞூற்று முப்பதோடு ஒன்பது
மாய் வரு வாயு வளப்பு உள் இருந்தே.
உரை
   
62இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்று உடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.
உரை
   
63எழுகின்ற சோதியுள் நாயகி தன் பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
எழுநூற்று இருபத்து ஒன்பான் அது நாலாய்
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே.
உரை
   
64ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.
உரை
   
65சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து
உந்திச் சமாதி யுடை ஒளியோகியே.
உரை
   
66அணங்கு அற்றம் ஆதல் அரும்சன நீவல்
வணங்கு உற்ற கல்விமா ஞானம் மிகுத்தல்
சுணங்கு உற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல்
நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே.
உரை
   
67மரணம் சரை விடல் வண்பர காயம்
இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணன் திருஉற வாதன் மூ ஏழாங்
கரன் உறு கேள்வி கணக்கு அறிந்தேனே.
உரை
   
68ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே.
உரை
   
69மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்கக்
கோலிய ஐம் முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனி நாதம்
பாலித்த சத்தி பரை பரன் பாதமே.
உரை
   
70ஆதார யோகத்து அதி தேவொடும் சென்று
மீது ஆன தற்பரை மேவும் பரன் ஒடு
மேதாதி ஈர் எண் கலை செல்லம் மீது ஒளி
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே.
உரை
   
71மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித்
துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய் அடியார்க்குப்
பதி அது காட்டும் பரமன் நின்றானே.
உரை
   
72கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர்
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து
பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டு இட்டு
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே.
உரை