மூன்றாம் தந்திரம்

15. ஆயுள் பரீட்சை

1வைத்த கை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம்
அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே.
உரை
   
2ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின் கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள் குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சின் உள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே.
உரை
   
3ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமேல் உலகில் தலைவனும் ஆமே.
உரை
   
4தலைவனிடம் வலம் சாதிப்பார் இல்லை
தலைவனிடம் வலம் ஆயிடில் தையல்
தலைவனிடம் வலம் தன் வழி அஞ்சில்
தலைவனிடம் வலம் தன் வழி நூறே.
உரை
   
5ஏறிய வானில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளி இவ் வகையே.
உரை
   
6இவ்வகை எட்டும் இடம் பெற ஓடிடில்
அவ் வகை ஐம்பதே என்ன அறியலாம்
செவ் வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
மூவ் வகை ஆம் அது முப்பத்து மூன்றே.
உரை
   
7மும் மூன்றும் ஒன்றும் முடிவு உற நின்றிடில்
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும்
ஐம் மூன்றும் ஓடி அகலவே நின்றிடில்
பன் மூன்றொடு ஈர் ஆறு பார்க்கலும் ஆமே.
உரை
   
8பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில்
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டுப்
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில்
தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே.
உரை
   
9ஏ இரு நாளும் இயல்பு உற ஓடிடில்
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும்
தேய் உற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே.
உரை
   
10அளக்கும் வகை நாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒரு நாலும் மெய்ப் பட நிற்கும்
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில்
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே.
உரை
   
11காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பு அற மூ ஐந்தேல்
காணலும் ஆகும் கருத்து உற ஒன்றே.
உரை
   
12கருதும் இருபதில் காண ஆறு ஆகும்
கருதும் ஐ ஐந்தில் காண்பது மூன்று ஆம்
கருதும் இருபது உடன் ஆறு காணில்
கருதும் இரண்டு எனக் காட்டலும் ஆமே.
உரை
   
13காட்டலும் ஆகும் கலந்து இருபத்து ஏழில்
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று எனக்
காட்டலும் ஆகும் கலந்து இரு பத்து எட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈர் ஐந்தே.
உரை
   
14ஈர் ஐந்தும் ஐந்தும் இரு மூன்று எட்டுக்கும்
பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும்
வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில்
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே.
உரை
   
15ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்து ஒன்று ஆகில்
கன்றிய நாளும் கருத்து உற மூன்று ஆகும்
சென்று உயிர் நால் எட்டும் சேரவே நின்றிடின்
மன்று இயல்பாகும் மனையில் இரண்டே.
உரை
   
16மனையில் ஒன்று ஆகும் மாதம் மும் மூன்றும்
சுனையில் ஒன்று ஆகத் தொனித்தனன் நந்தி
வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனை உற நின்ற தலைவனும் ஆமே.
உரை
   
17ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே.
உரை
   
18அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின்
பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில்
செறிவது நின்று திகழும் அதுஏ.
உரை
   
19அது அருளும் மருள் ஆன உலகம்
பொது அருளும் புகழாளர்க்கு நாளும்
மது அருளும் மலர் மங்கையர் செல்வி
இது அருள் செய்யும் இறையவன் ஆமே.
உரை
   
20பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி ஆவது பற்று அறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே.
உரை