மூன்றாம் தந்திரம்

17. வாசசூலம்

1வாரத்தில் சூலம் வரும் வழி கூறுங்கால்
நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும்
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள்
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே.
உரை
   
2தெக்கணம் ஆகும் வியாழத்துச் சேர் திசை
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில்
துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின்
மிக்கது மேல் வினை மேல் மேல் விளையுமே.
உரை