தொடக்கம் |
|
|
1 | போற்று கின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத் தேற்று கின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்று கின்றேன் அறையோ சிவ யோகத்தை ஏற்று கின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஓர் எழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவராய் மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை மா எழுத்தாலே மயக்கமே உற்றதுஏ. |
|
உரை
|
|
|
|
|
3 | தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும் தேவர் உறை கின்ற தென் பொது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | ஆமே பொன் அம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும் அத் தாண்டவம் ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே. |
|
உரை
|
|
|
|
|
5 | தாண்டவம் ஆன தனி எழுத்து ஓர் எழுத்து தாண்டவம் ஆனது அனுகிரகத் தொழில் தாண்டவக் கூத்துத் தனி நின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியம் தானே. |
|
உரை
|
|
|
|
|
6 | தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே பரஞ் சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே. |
|
உரை
|
|
|
|
|
7 | தராதல மூலைக்குத் தற்பர மா பரன் தராதலம் வெப்பு நமசிவாய வாம் தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் தராதல யோகம் தயா வாசி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம் என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
9 | ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை ஆனந்த மோடும் அறிய வல்லார் கட்கு ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே. |
|
உரை
|
|
|
|
|
10 | படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
11 | வாறே சதாசிவ மாறு இலா ஆகமம் வாறே சிவகதி வண்டு உறை புன்னையும் வாறே திருக் கூத்து ஆகம வசனங்கள் வாறே பொது ஆகும் மன்றின் அமலமே. |
|
உரை
|
|
|
|
|
12 | அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம் அலமந்து இரோதாய் ஆகும் ஆனந்தம் ஆம் அமலம் சொல் ஆணவ மாயை காமியம் அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே. |
|
உரை
|
|
|
|
|
13 | தானே தனக்குத் தலைவியும் ஆய் நிற்கும் தானே தனக்குத் தன் மலையாய் நிற்கும் தானே தனக்குத் தன் மயம் ஆய் நிற்கும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
14 | தலைவனுமாய் நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனுமாய் நின்ற சற் பாத்திரத்தைத் தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞானத் தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே. |
|
உரை
|
|
|
|
|
15 | இணையார் திருவடி எட்டு எழுத்து ஆகும் இணையார் கழல் இணை ஈர் அஞ்சது ஆகும் இணையார் கழல் இணை ஐம்பத்து ஒன்று ஆகும் இணையார் கழல் இணை ஏழாயிரமே. |
|
உரை
|
|
|
|
|
16 | ஏழாயிரம் ஆய் இருபதாய் முப்பதாய் ஏழாயிரத்தும் எழுகோடி தான் ஆகி ஏழாயிரத்து உயிர் எண் இலா மந்திரம் ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
17 | இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி இருக்கின்ற மந்திரம் இவ் வண்ணம் தானே. |
|
உரை
|
|
|
|
|
18 | தானே தனக்குத் தகு நட்டம் தான் ஆகும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனி நடம் தானே. |
|
உரை
|
|
|
|
|
19 | நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும் நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம் நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே. |
|
உரை
|
|
|
|
|
20 | செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில் செம்பு பொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்பு பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயும் எனச் செம்பு பொன் ஆன திரு அம்பலமே. |
|
உரை
|
|
|
|
|
21 | திரு அம்பலம் ஆகச் சீர்ச் சக்கரத்தைத் திரு அம்பலம் ஆக ஈர் ஆறு கீறித் திரு அம்பலம் ஆக இருபத்து அஞ்சு ஆக்கித் திரு அம்பலம் ஆகச் செபிக்கின்ற ஆறே. |
|
உரை
|
|
|
|
|
22 | வாறே சிவாய நமச்சி வாய நம வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை வாறே அருளால் வளர் கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே. |
|
உரை
|
|
|
|
|
23 | பொன் ஆன மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன் ஆன மந்திரம் பொறிகிம் சுகத்து ஆகும் பொன் ஆன மந்திரம் புகையுண்டு பூரிக்கில் பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே. |
|
உரை
|
|
|
|
|
24 | பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும் பொன் பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே. |
|
உரை
|
|
|
|
|
25 | சொல்லும் ஒரு கூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயந்துடனே வரும் சொல்லினும் பாசச் சுடர் பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக் கூத்தின் சூக்குமம் தானே. |
|
உரை
|
|
|
|
|
26 | சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல் சூக்குமம் ஆன வழி இடைக் காணலாம் சூக்குமம் ஆன வினையைக் கெடுக்கலாம் சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே. |
|
உரை
|
|
|
|
|
27 | ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட ஆனந்தம் ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ-ஓம் என்று ஐந்திடம் ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் ஆனந்தம் ஆனந்தம் அம்-ஹரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
28 | மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள மேனி இரண்டும் இகார விகாரியா மேனி இரண்டும் ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும் மேனி இரண்டும் ஈ-ஓ-ஊ-ஆ-ஏ-கூத்து ஆமே. |
|
உரை
|
|
|
|
|
29 | கூத்தே சிவாய நம மசி வாயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவாய நம ஆயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவய நம ஆயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோள் ஒன்றும் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
30 | ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட ஒன்றினின் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே. |
|
உரை
|
|
|
|