நான்காம் தந்திரம்

3. அருச்சனை

1அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல்
வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
உரை
   
2சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம்
தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில்
பாங்கு படப் பனி நீரால் குழைத்து வைத்து
ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பு ஒடே.
உரை
   
3அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே
பொன் செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்டனே வந்து எய்திடும் முத்தியே.
உரை
   
4எய்தி வழிப் படில் எய்தாதன இல்லை
எய்தி வழிப் படில் இந்திரன் செல்வம் முன்
எய்தி வழிப் படில் எண் சித்தி உண்டாகும்
எய்தி வழிப் படில் எய்திடும் முத்தியே.
உரை
   
5நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத்தியம் அனு சந்தான
நண்ணிய பஞ்சாங்க நண்ணும் செபம் என்னும்
மன்னும் அன பவனத் தொடு வைகுமே.
உரை
   
6வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்ற பேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே.
உரை
   
7அறிவரும் ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்பு கின்றார்கள்
நெறி மனை உள்ளே நிலை பெற நோக்கில்
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே.
உரை
   
8இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதய
மருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும்
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே.
உரை
   
9தானவன் ஆக அவனே தான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆகப்
போனவன் அன்பு இது நால் ஆம் மரபுறத்
தானவன் ஆகும் ஓர் ஆதித்த தேவரே.
உரை
   
10ஓங்கார உந்திக்கு கீழ் உற்றிடும் எந் நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும்
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே.
உரை
   
11நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவது அன்றாம்
சிவம் ஆகும் மா மோனம் சேர்தல் மெய் வீடே.
உரை
   
12தெளி வரும் நாளில் சிவ அமுது ஊறும்
ஒளி வரு நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளி வரும் அப் பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்துஏ.
உரை