நான்காம் தந்திரம்

9. ஏரொளிச் சக்கரம்

1ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ்
ஏர் ஒளி விந்துவினால் எழு நாதம் ஆம்
ஏர் ஒளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏர் ஒளிச் சக்கரம் அந் நடு வன்னியே.
உரை
   
2வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம்
வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே.
உரை
   
3சொல்லிய விந்துவும் ஈர் ஆறு நாதம் ஆம்
சொல்லிடும் அப்பதி அவ் எழுத்து ஆவன
சொல் இடு நூறு ஒடு நால் பத்து நால் உரு
சொல் இடும் சக்கரம் ஆய் வரும் மேல் அதே.
உரை
   
4மேல் வரும் விந்துவும் அவ் எழுத்தாய் விடும்
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்து உடன்
மேல் வரும் அப்பதி அவ் எழுத்தே வரின்
மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே.
உரை
   
5ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம்
ஞாலம் அது ஆயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம் அது ஆயிடும் அப்பதி யோசனை
ஞாலம் அது ஆக விரிந்தது எழுத்தே.
உரை
   
6விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்து அது சக்கரம் ஆக
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.
உரை
   
7அப்பு அது ஆக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே.
உரை
   
8ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை
ஆகாச அவ் எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே.
உரை
   
9அறிந்திடும் சக்கரம் ஐ ஐந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ் எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப் பகலோன் இல்லை ஆமே.
உரை
   
10அம் முதல் ஆறும் அவ் ஆதி எழுத்து ஆகும்
அம் முதல் ஆறும் அவ் அம்மை எழுத்து ஆகும்
இம் முதல் நாலும் இருந்திடும் வன்னியே
இம் முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம்.
உரை
   
11எழுத்து அவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்து அவை ஆறு அது அந் நடு வன்னி
எழுத்து அவை அந் நடு அச் சுடர் ஆகி
எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே.
உரை
   
12அந்தமும் ஈறு முதலா நவைஅற
அந்தமும் அப் பதினெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப் பதின்மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.
உரை
   
13ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபது
ஆவினம் அப் பதினைந்து இனம் ஆய் உறு
ஆவினம் அப் பதினெட்டுடன் ஆய் உறு
அவினம் அக் கதிரோன் வர வந்தே.
உரை
   
14வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பது ராசியும்
வந்திடும் நாள் அது முந்நூற்று அறுபதும்
வந்திடும் ஆண்டு வகுத்து உரை அவ்வியே.
உரை
   
15அவ் வினம் மூன்றும் அவ் ஆடு அது வாய் வரும்
எவ்வினம் மூன்றும் கிளர் தரு வேர் அதாம்
சவ் வினம் மூன்றும் தழைத்திடும் தண்டு அதாம்
இவ் வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.
உரை
   
16இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின்
இராசியுள் சக்கரம் என்று அறி விந்து ஆம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடும் ஆறே.
உரை
   
17நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ் எழுத்தே வரில்
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே.
உரை
   
18தாரகை ஆகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேல் ஓர் தழைத்தது பேர் ஒளி
தாரகை சந்திரன் நல் பகலோன் வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.
உரை
   
19கண்டிடும் சக்கரம் விந்து வளர்வது ஆங்கு
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திடக்
கண்டிடும் வன்னிக் கொழுந்து அன ஒத்தபின்
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே.
உரை
   
20கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும்
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே.
உரை
   
21நின்றது அண்டமும் நீளும் புவி எலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.
உரை
   
22விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம்
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண் மடி கொண்டது வீசமே.
உரை
   
23வீசம் இரண்டு உள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடும் மேல் உற
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.
உரை
   
24விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில்
விரிந்தது உள் கட்டம் எட்டு எட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே.
உரை
   
25விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்த இஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தாளே.
உரை
   
26விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே.
உரை
   
27மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரி வட்டம் ஆம்
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே.
உரை
   
28உன்னிட்ட வட்டத்தில் ஒத்துஎழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பு அறப் பின் நிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.
உரை
   
29பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்றநுண் பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே.
உரை
   
30அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே.
உரை
   
31கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம்
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம்
மாறு இயல்பாக மதித்துக் கொள்வார்க்கே.
உரை
   
32மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும்
மதித்து அங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்து அங்கு எழுந்தவை கூட கிலாவே.
உரை
   
33கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும்
பாடி உள் ஆகப் பகைவரும் வந்து உறார்
தேடி உள் ஆகத் தெளிந்து கொள்வார்க்கே.
உரை
   
34தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அந் நடு ஆக்கிக்
குளிர்ந்த வரனைக் கூடி உள் வைத்து
வளிந்து அவை அங்கு எழு நாடிய காலே.
உரை
   
35கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம்
ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய்
பாலித்து எழுந்து பகை அற நின்றபின்
மால் உற்ற மந்திரம் மாறிக் கொள்வார்க்கே.
உரை
   
36கொண்ட இம் மந்திரம் கூத்தன் எழுத்து அதாய்ப்
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின்
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நம எனே.
உரை