நான்காம் தந்திரம்

10. வயிரவச் சக்கரம்

1அறிந்த பிரதமை யோடு ஆறும் அறிஞ்சு
அறிந்த அச்சத்தம் இம் மேல் இவை குற்றம்
அறிந்தவை ஒன்று விட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து வலம் அது ஆக நடவே.
உரை
   
2நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண் அது போக்கித்
தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது
படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே.
உரை
   
3ஆமே அப் பூண்ட அருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு
ஆமே தமருக பாசமும் கை அது
ஆமே சிரத்தொடு வாள் அது கையே.
உரை
   
4கை அவை ஆறும் கருத்து உற நோக்கிடும்
மெய் அது செம்மை விளங்கு வயிரவன்
துய்யர் உளத்தில் துளங்கு மெய் உற்றது ஆய்ப்
பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே.
உரை
   
5பூசனை செய்யப் பொருந்தி ஓர் ஆயிரம்
பூசனை செய்ய மது உடன் ஆடும் ஆல்
பூசனை சாந்து சவாது புழுகு நெய்
பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே.
உரை
   
6வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்றபின்
வேண்டியவாறு வரும் வழி நீ நட
வேண்டிய வாறு அது ஆகும் கருத்தே.
உரை