ஐந்தாம் தந்திரம்

1. சுத்த சைவம்

1ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேர் அறிவாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழுந்து
தாரணி நால் வகைச் சைவமும் ஆமே.
உரை
   
2சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டு
சித்தும் அசித்தும் சேர் உறாமே நீத்த
சுத்தம் அசுத்தமும் தோய் உறாமே நின்று
நித்தம் பரஞ் சுத்தம் சைவர்க்கு நேயமே.
உரை
   
3கற்பன கற்றுக் கலை மன்னும் மெய் யோகம்
முற்பத ஞான முறை முறை நண்ணியே
சொற் பதம் மேவித் துரிசு அற்று மேல் ஆன
தற்பரம் கண்டு உளோர் சைவ சிந்தாந்தரே.
உரை
   
4வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர்
பூதாந்த போதாந்தம் ஆகப் புனம் செய்ய
நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே.
உரை