ஐந்தாம் தந்திரம்

9. சன்மார்க்கம்

1சாற்றும் சன்மார்க்கம் ஆம் தற் சிவ தத்துவத்
தோற்றங்கள் ஆன சுருதிச் சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே.
உரை
   
2சைவப் பெருமைத் தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
உரை
   
3தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத்
தரு முத்திச் சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே.
உரை
   
4தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியா தவர் தீரார் பிறப்பே.
உரை
   
5தான் அவன் ஆகித் தான் ஐந்தாம் மலம் செற்று
மோனம் அதாம் மொழிப் பால் முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனு பூதியில் இன்பமும்
தான் அவனாய் உறல் ஆன சன் மார்க்கமே.
உரை
   
6சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன் மார்க்கத் தார்க்கும் இடத் தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கம் தெரிசனம்
எம் மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.
உரை
   
7சன் மார்க்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம்
பின் மார்க்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும்
துன் மார்க்கம் விட்ட துரியத் துரிசு அற்றார்
சன் மார்க்கம் தான் ஆகும் சன்மார்க்கமே.
உரை
   
8சன் மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்குப்
பின் மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால்
நன் மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே.
உரை
   
9அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முஇன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் போதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே.
உரை
   
10பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசி யாத நெஞ்சம் கசியக் கசிவித்து
ஒசியாத உண்மைச் சொரு போதயத்து உற்று
அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே.
உரை
   
11மார்க்கம் சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன் மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறிவைகா தோர்
மார்க்கம் சன் மார்க்கம் ஆம் சித்த யோகமே.
உரை