ஐந்தாம் தந்திரம்

13. சாலோகம்

1சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியை ஆல்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பா லோகம் இல்லாப் பரன் உரு ஆமே.
உரை
   
2சமயம் கிரியையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனைத் தேறல் மூன்று ஆம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே.
உரை