ஐந்தாம் தந்திரம்

15. சாரூபம்

1தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றிக் கைகூடா
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்,
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.
உரை
   
2சயிலலோகத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம் அது ஆகும் சராசரம் போலப்
பயிலும் குருவின் பதி புக்க போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே.
உரை