ஐந்தாம் தந்திரம்

16. சாயுச்சியம்

1சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீவுதல்
சைவம் சிவ ஆனந்தம் சாயுச்சியமே.
உரை
   
2சா யுச்சியம் சாக்கிர் அதீதம் சாருதல்
சா யுச்சிம் உப சாந்தத்துத் தங்குதல்
சா யுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலாச்
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே.
உரை