ஐந்தாம் தந்திரம்

18. புறச் சமயதூடணம்

1ஆயத்து உள் நின்ற அறு சமயங்களும்
காயத்து உள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.
உரை
   
2ஆறு சமய முதலாம் சமயங்கள்
ஊறு அது எனவும் உணர்க உணர்பவர்
வேறு அது அற உணர்வார் மெய்க் குரு நந்தி
ஆறி அமைபவர்க்கு அண்ணிக்கும் தானே.
உரை
   
3உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்து அறியார்களே.
உரை
   
4உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.
உரை
   
5முதல் ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக்கை கான்
மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே
அது கூறல் ஒக்கும் ஆறு சமயமே.
உரை
   
6ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவன் அலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனைபுகல் ஆமே.
உரை
   
7சிவம் அல்லது இல்லை அறையே சிவம் ஆம்
தவம் அல்லது இல்லை தலைப்படு வார்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே.
உரை
   
8அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே
முண் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே.
உரை
   
9சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம்
மவகதி பாசப் பிறவி ஒன்று உண்டு
தவகதி தன்னொடு நேர் ஒன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ் வகை ஆமே.
உரை
   
10நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயம் அவ் ஆறு உட்படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா
வீறு பர நெறி இல்லா நெறி யன்றே.
உரை
   
11கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய் உற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே.
உரை
   
12மயங்கு கின்றாரும் மதி தெளிந்தாரும்
முயங்கி இருவினை முழை முகப் பாச்சி
இயங்கிப் பெறுவரேல் ஈறு அது காட்டில்
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே.
உரை
   
13சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானுடராம் அவர்
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே.
உரை
   
14வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
பழி அது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறி வாளன் தன் சொல் வழி முன்நின்று
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே.
உரை
   
15மாதவர் எல்லாம் மா தேவன் பிரான் என்பர்
நாதம் அது ஆக அறியப் படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே.
உரை
   
16அரன் நெறி அப்பனை ஆதிப் பிரானை
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானைப்
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியா விடில் பல்வகைத் தூரமே.
உரை
   
17பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன்
பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும்
துரிசு அற நீ நினை தூய் மணி வண்ணன்
அரிது அவன் வைத்த அற நெறி தானே.
உரை
   
18ஆன சமயம் அது இது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடுமின்
ஊனம் கடந்த உரு அது ஆமே.
உரை
   
19அந் நெறி நாடி அமரர் முனிவரும்
செல் நெறி கண்டார் சிவன் எனப் பெற்றார் பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
உரை
   
20உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.
உரை
   
21வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கிப்
பழி நடப் பார்க்குப் பரவலும் ஆமே.
உரை
   
22வழி சென்ற மாதவம் வைகின்ற போது
பழி செல்லும் வல்வினைப் பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.
உரை