தொடக்கம் |
|
|
ஐந்தாம் தந்திரம் 19. நிராசாரம் |
1 | இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும் கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
2 | பாங்கு அமர் கொன்றைப் படர் சடையான் அடி தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் ஏங்கி உலகில் இருந்து அழுவாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் அரும் தவம் மேற் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில் வருந்தா வகை செய்து வானவர் கோனும் பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர் பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர் கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள் நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும் குறி அது கண்டும் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. |
|
உரை
|
|
|
|
|
6 | மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன் என்னின் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள் துன்னி மனமே தொழுமின் துணை இலி தன்னையும் அங்கே தலைப் படல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
7 | ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயம் உற்று ஆங்காரம் அற்ற அனுபவம் கை கூடார் சாங்காலம் உன்னார் பிறவாமை சார் உறார் நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந்தார்களே. |
|
உரை
|
|
|
|