ஆறாம் தந்திரம்

5. தவம்

1ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப் பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே.
உரை
   
2எம் ஆர் உயிரும் இரு நிலத் தோற்றமும்
செம் மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திரு அருள் பெற்றவர் அல்லால்
இம் மாதவத்தின் இயல்பு அறியாரே.
உரை
   
3பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்
சிறப் பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே.
உரை
   
4இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மையாளரைப் பேதிக்க என்றே
இருந்து இந்திரன் எவரே வரினும்
திருந்து நும் தம் சிந்தை சிவன் அவன் பாலே.
உரை
   
5கரந்தும் கரந்து இலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அரும்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி ஆனே.
உரை
   
6அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே.
உரை
   
7சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்கு மின்
பார்த்த அப் பார்வை பசுமரத்து ஆணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.
உரை
   
8தவம் வேண்டும் ஞானம் தலைபட வேண்டில்
தவம் வேண்டா ஞான சாமாதிகை கூடில்
தவம் வேண்டா அச் சக மார்க்கத் தோர்க்குத்
தவம் வேண்டா மாற்றம் தனை அறியாரே.
உரை