தொடக்கம் |
|
|
1 | தவம் மிக்கவரே தலையான வேடர் அவம் மிக்கவரே அதி கொலை வேடர் அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அவ் வேடம் தவம் மிக்கவர்க்கு அன்றித் தாங்க ஒண்ணாதே. |
|
உரை
|
|
|
|
|
2 | பூதி அணிவது சாதனம் ஆதியில் காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே. |
|
உரை
|
|
|
|
|
3 | யோகிக்கு இடும் அதுவுள் கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடை அது ஒன்று ஆகத்து நீறு அணி ஆங்கு அக் கபாலம் சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
4 | காது அணி குண்டலம் கண்டிகை நாதமும் ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை ஏதம் இல் பாதுகம் யோகாந்த மா தனம் ஏதல் இல் யோக பட்ட அம் தண்டம் ஈர் ஐந்தே. |
|
உரை
|
|
|
|