தொடக்கம் |
|
|
ஆறாம் தந்திரம் 10. திருநீறு |
1 | நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் நூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம் பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர் ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே. |
|
உரை
|
|
|
|
|
2 | கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரம் ஆன திருவடி சேர்வரே. |
|
உரை
|
|
|
|
|
3 | அரசுடன் ஆலத்தி ஆகும் அக்காரம் விரவு கனலில் வியன் உரு மாறி நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே. |
|
உரை
|
|
|
|