தொடக்கம் |
|
|
ஆறாம் தந்திரம் 11. ஞான வேடம் |
1 | ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்பால் ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே. |
|
உரை
|
|
|
|
|
2 | புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை நல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித் துன் ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர் பின் ஞானத்தோர் ஒன்றும் பேச கில்லாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | சிவ ஞானி கட்கும் சிவ யோகி கட்கும் அவம் ஆன சாதனம் ஆகாது தேரில் அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும் உவமானம் இல் பொருள் உள் உறம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | கத்தித் திரிவர் கழுவடி நாய் போல் கொத்தித் திரிவர் குரக்களி ஞாளிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. |
|
உரை
|
|
|
|
|
5 | அடியார் அவரே அடியார் அலா தார் அடியாரும் ஆகார் அவ் வேடமும் ஆகார் அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றோர் அடியார் அலாதார் அடியார்கள் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்ல ஆம் தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே ஆன அவ்வேடம் அருள் ஞான சாதனம் ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே. |
|
உரை
|
|
|
|
|
7 | ஞானத்தினால் பதம் நண்ணும் சிவ ஞானி தானத்தில் வைத்த தனி ஆலயத்தன் ஆம் மோனத்தின் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம் ஏனைத் தவசி இவன் எனல் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
8 | தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும் ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும் தான் உறு சாதக முத்திரை சாத்தலும் ஏனமும் நந்தி பத முத்தி பெற்றதே. |
|
உரை
|
|
|
|