ஏழாம் தந்திரம்

24. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

1ஆக மதத்தன ஐந்து களிறு உள
ஆக மதத்து அறியோடு அணை கின்றில
பாகனும் மெய்த்தவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.
உரை
   
2கருத்தின் நல் நூல் கற்றுக் கால் கொத்திப் பாகன்
திருத்தலும் பாய் மாத் திகைத்து அன்றிப் பாயா
எருத்து உறவே இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழி நடவாதே.
உரை
   
3புலம் ஐந்தும் புள் ஐந்து புள் சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம் வந்து போம்வழி ஒன்பது தானே.
உரை
   
4அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்ததும் அஞ்சுகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்து இட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.
உரை
   
5ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்ற கிலோமே.
உரை
   
6சொல்ல கில்லேன் சுடர்ச் சோதியை நாள் தொறும்
சொல்ல கில்லேன் திரு மங்கையும் அங்கு உள
வெல்ல கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்ல நின்று ஓடும் குதிரை ஒத்தேனே.
உரை
   
7எண் இலி இல்லி உடைத்து அவ் இருட்டு அறை
எண் இலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண் இலி இல்லியோடு ஏகாமை காக்கு மேல்
எண் இலி இல்லது ஓர் இன்பம் அது ஆமே.
உரை
   
8விதியின் பெருவலி வேலை சூழ் வையம்
துதியின் பெருவலி தொல் வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.
உரை