தொடக்கம் |
|
|
ஏழாம் தந்திரம் 26. அசற்குரு நெறி |
1 | உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் கணு இன்றி வேத ஆகம நெறி காணான் பணி ஒன்று இலா தோன் பர நிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசல் குரு ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | மந்திர தந்திர மா யோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் சிந்தனை செய்யாத் தெளிவுயாது ஊண் பொருள் அந்தகர் ஆவோர் அசல் குரு ஆமே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆம் ஆறு அறியாதோன் மூடன் அதி மூடன் காம ஆதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமா அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்று கோமான் அலன் அசனத்து ஆகும் குரவனே. |
|
உரை
|
|
|
|
|
4 | கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால் தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும் நற் பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே. |
|
உரை
|
|
|
|
|
5 | குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர் முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின் குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. |
|
உரை
|
|
|
|