எட்டாம் தந்திரம்

2. உடல் விடல்

1பண் ஆகும் காமம் பயிலும் வசனமும்
விண் ஆம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண் ஆம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
உரை
   
2அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண்
கழிகின்ற கால் அவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறு துணை இல்லையே.
உரை
   
3இலை ஆம் இடையில் எழுகின்ற காம
முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலை ஆய மின் உடல் தாங்கித் திரியும்
சிலை ஆய சித்தம் சிவ முன் இடைக்கே.
உரை