எட்டாம் தந்திரம்

8. முக் குற்றம்

1மூன்று உள குற்றம் முழுது நலிவன
மான்று இருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றின் உள் பட்டு முடிகின்ற வாறே.
உரை
   
2காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து
ஏமம் பிடித்து இருந் தேனுக்கு எறி மணி
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர்
தாமம் அதனைத் தலைப் பட்டவாறே.
உரை