எட்டாம் தந்திரம்

14. முச் சொரூபம்

1ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு
ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே.
உரை
   
2மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கு அற்ற வாறே.
உரை
   
3உலகம் புடை பெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே.
உரை
   
4பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருஉரு ஆகிக்
குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே.
உரை
   
5மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணி எனல் ஆய் நின்றவாறு அது போலத்
தணி முச்சொருப ஆதி சத்தி ஆதி சாரப்
பணி வித்த பேர் நந்தி பாதம் பற்றாயே.
உரை
   
6கல் ஒளி மா நிறம் சோபைக் கதிர் தட்ட
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம்
சொல் அறு முப் பாழில் சொல் அறு பேர் ஊரைத்து
அதல் அறு முத்திராம் அந்தத்து அனு பூதியே.
உரை
   
7உடந்த செந்தாமரை உள் உறு சோதி
நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ்
விடம் தரு வாசலை மேல் திறவீரே.
உரை