தொடக்கம் |
|
|
எட்டாம் தந்திரம் 16. முச்சூனிய தொந்தத் தசி |
1 | தற்பதம் தொம் பதம் தான் ஆம் அசி பதம் தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின் சொல் பதம் ஆகும் தொந்தத் தசியே. |
|
உரை
|
|
|
|
|
2 | தொந்தத் தசி மூன்றில் தொல் காமியம் ஆதி தொந்தத் தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி வந்த மலம் குணம் மாளச் சிவம் தோன்றின் இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே. |
|
உரை
|
|
|
|
|
3 | தொந்தத் தசியை அவ் வாசியில் தோற்றியே அந்த முறை ஈர் ஐந்து ஆக மதித்து இட்டு அந்தம் இலாத அவத்தை அவ்வாக்கியத்து உந்து முறையில் சிவ முன் வைத்து ஓதிடே. |
|
உரை
|
|
|
|
|
4 | வைத்துச் சிவத்தை மதி சொரு பானந்தத்து உய்த்துப் பிரணவம் ஆம் உபதேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
5 | தொம் பதம் மாயை உள் தோன்றிடும் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும் அவ் வாக்கியம் உம்பர் உரை தொந்தத் தசி வாசி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஆகிய அச்சோயம் தேவதத் தன்னிடத்து ஆகிய வை விட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசி என்ப மெய் அறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
7 | தாமத காமியம் ஆகித் தகுகுண மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு ஆமறும் அவ்வும் அவ் வாயுடன் மூன்றில் தாம் ஆம் துரியமும் தொந்தத் தசி அதே. |
|
உரை
|
|
|
|