எட்டாம் தந்திரம்

27. விசுவக் கிராசம்

1அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம் அப்பரத்தே.
உரை
   
2உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில்
படரும் சிவ சத்தி தாமே பரம் ஆம்
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
உரை
   
3செவி மெய் வாய் கண் மூக்குச் சேர் இந்திரியம்
அவி இன்றி யமனம் ஆதிகள் ஐந்தும்
குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து
தவிர் ஒன்று இலாத சரா சரம் தானே.
உரை
   
4பரன் எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும்
திரன் எங்கும் ஆகிச் செறிவு எங்கும் எய்தும்
உரன் எங்கும் ஆய் உலகு உண்டு உமிழ்க்கும்
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்து உற்ற வாறே.
உரை
   
5அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து
கிளர்ந்த பரம் சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.
உரை
   
6இரும்பு இடை நீர் என என்னை உள்வாங்கிப்
பரம்பரம் ஆன பரம் அது விட்டே
உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்த என் நந்தி இதயத்து உளானே.
உரை
   
7கரி உண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும் முன் ஓதும் சிவமும்
அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவ பெருமானே.
உரை
   
8அந்தமும் ஆதியும் ஆகும் பரா பரன்
தந்தம் பரம் பரன் தன்னில் பரம் உடன்
நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயந்தத்தே
நந்தி இருந்தனன் நாம் அறியோமே.
உரை