தொடக்கம் |
|
|
எட்டாம் தந்திரம் 30. அவா அறுத்தல் |
1 | வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே. |
|
உரை
|
|
|
|
|
2 | மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன் வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்து உளே நின்று முத்தி தந்தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்று அற வீசி விடுவது வேட்கையை மெய்ந் நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவாக் கடல் உட் பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக் கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் தவாக் கடல் ஈசன் தரித்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
6 | நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் துன் தொழில் அற்றுச் சுத்தம் அது ஆகலும் பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர் பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. |
|
உரை
|
|
|
|
|
7 | உண்மை உணர்ந்து உற ஒண் சித்தி முத்தி ஆம் பெண் மயல் கெட்டு அறப் பேறு அட்ட சித்தி ஆம் திண்மையின் ஞானி சிவ காயம் கை விட்டால் வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே. |
|
உரை
|
|
|
|
|
8 | அவன் இவன் ஈசன் என்று அன்பு உற நாடிச் சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் பவன் இவன் பல் வகையாம் இப் பிறவி புவன் இவன் போவது பொய் கண்ட போதே. |
|
உரை
|
|
|
|
|
9 | கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறு இந்தப் பார் அகம் முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம் நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே. |
|
உரை
|
|
|
|