எட்டாம் தந்திரம்

32. முத்தி உடைமை

1முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன் பணி
மெய்த் தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மைப்
பத்தியில் உற்று ஓர் பரானந்த போதரே.
உரை
   
2வளம் கனி தேடிய வன் தாள் பறவை
உளம் கனி தேடி அழி தரும் போது
களம் கனி அங்கியில் கை விளக்கு ஏற்றி
நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.
உரை