ஒன்பதாம் தந்திரம்

3. பிரணவ சமாதி

1தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர் உரை
பாலித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலைப் பிரணவம் வேத அந்த வீதியே.
உரை
   
2ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே.
உரை
   
3ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சரா சரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பர சிவ ரூபமே.
உரை
   
4வருக்கம் சுகம் ஆம் பிரமமும் ஆகும்
அருக்கம் சரா சரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி
சுருக்கம் இன் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே.
உரை
   
5மலையு மனோ பவம் அருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறி ஆம்
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும்
நலமும் சன் மார்க்கத்து உபதேசம் தானே.
உரை
   
6சோடச மார்க்கமும் சொல்லும் சன் மார்க்கி கட்கு
ஆடிய ஈற் ஆறின் அந்தமும் ஈர் ஏழில்
கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து
ஏறிய ஞான ஞேயாந் தத்து இருக்கவே.
உரை