தொடக்கம் |
|
|
ஒன்பதாம் தந்திரம் 5. தூல பஞ்சாக்கரம் |
1 | ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின் ஐம்பது எழுத்தே அஞ்சு எழுத்து ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | அகார முதல் ஆக ஐம்பத்து ஒன்று ஆகி உகார முதல் ஆக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி நகார முதல் ஆகும் நந்தி தன் நாமமே. |
|
உரை
|
|
|
|
|
3 | அகர ஆதி ஈர் எண் கலந்த பரையும் உகர ஆதி தன் சத்தி உள் ஒளி ஈசன் சிகர ஆதி தான் சிவ வேதமே கோண நகர ஆதி தான் மூல மந்திரம் நண்ணுமே. |
|
உரை
|
|
|
|
|
4 | வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய்த் தூயது ஓர் துண்டம் இருமத்து அகம் செல்லல் ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே. |
|
உரை
|
|
|
|
|
5 | கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக் கரணங்கள் விட்டு உயிர் தான் எழும் போது மரணம் கை வைத்து உயிர் மாற்றிடும் போதும் அரணம் கை கூட்டுவது அஞ்சு எழுத்து ஆமே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில் ஆய் உறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேய் உறு கண்ணி திரு எழுத்து அஞ்சையும் வாய் உற ஓதி வழுத்தலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
7 | குருவழி ஆய குணங்களின் நின்று கருவழி ஆய கணக்கை அறுக்க வரும் வழி மாள மறுக்க வல்லார் கட்கு அருள்வழி காட்டுவது அஞ்சு எழுத்து ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | வெறிக்க வினைத் துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திரு எழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும் குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே. |
|
உரை
|
|
|
|
|
9 | நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று துஞ்சும் பொழுது உன் துணைத் தாள் சரண் என்று மஞ்சு தவழும் வடவரை மீது உறை அஞ்சில் இறைவன் அருள் பெறல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
10 | பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது இரா மாற்றம் செய்வார் கொல் ஏழை மனிதர் பரா முற்றும் கீழொடு பல்வகை யாலும் அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே. |
|
உரை
|
|
|
|