தொடக்கம் |
|
|
ஒன்பதாம் தந்திரம் 9. ஆகாசப் பேறு |
1 | உள்ளத்து உளோம் என ஈசன் ஒருவனை உள்ளத்து உளே அங்கி ஆய ஒருவனை உள்ளத்து உளே நீதி ஆய ஒருவனை உள்ளத்து உளே உடல் ஆகாயம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | பெரு நிலம் ஆய் அண்டம் ஆய அண்டத்து அப்பால் குரு நிலம் ஆய் நின்ற கொள்கையான் ஈசன் பெரு நிலம் ஆய் நின்று தாங்கிய தாளோன் அரு நிலை ஆய் நின்ற ஆதிப் பிரானே. |
|
உரை
|
|
|
|
|
3 | அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | பயன் உறு கன்னியர் போகத்தின் உள்ளே பயன் உறும் ஆதி பரம் சுடர்ச் சோதி அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | அறிவுக்கு அறிவு ஆம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினில் பேர் ஒளி மூன்றும் அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெரும் காலம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஆகாச வண்ணன் அமரர் குலக் கொழுந்து ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் ஆகாசம் ஆய் அங்கி வண்ணனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
7 | உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற போது குயில் கொண்ட பேதை குலாவி உலாவி வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | நணுகில் அகல் இலன் ஆதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி நணுகிய மின் ஒளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
9 | புறத்து உள ஆகாசம் புவனம் உலகம் அகத்து உள ஆகாசம் எம் ஆதி அறிவு சிவத்துள் ஆகாசம் செழும் சுடர்ச் சோதி சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே. |
|
உரை
|
|
|
|