ஒன்பதாம் தந்திரம்

19. வரைஉரை மாட்சி

1தான் வரை அற்ற பின் ஆரை வரைவது
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது
காமனை வென்ற கண்ணாரை உகப்பது
தூ மொழி வாசகம் சொல்லுமின் நீரே.
உரை
   
2உரை அற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்குப்
புரை அற்று இருந்தான் புரிசடை யோனே.
உரை
   
3மன மாயை மாயை இம் மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவம் தானே.
உரை