1018
 

வார்க்கு அறிவுப் பெருவெளியைப் பற்றாகக் கொண்டு நிகழ்வது புலனாகும்.

(அ. சி.) எட்டானை - எண்வகை வடிவு உடையவனை.

(8)

2495. ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை 1யோனன்றே.

(ப. இ.) உயர்வரையுச்சி என்பது ஆணையிடமாகும். அதுவே நெற்றிப் புருவமாகும். அங்கு ஆறு முதலிய தோற்றரவில்லாமல் இடையறாது நீர் நிரப்பும் குளம் ஒன்றுண்டு. உலகியல் தாமரை சேற்றிற் பூப்பது. ஈண்டுப் பேசப்படும் ஆயிரவிதழ்த் தாமரை அருள் வெளியிற் பூப்பது. அதனால் அது சேற்றிற் பூவாததாகும். மாலையில் தாங்குருவே போன்று காணப்படும் பின்னற் சடையினையுடைய சிவபெருமான் பேருவகையோடும் இப் பூவல்லாமல் வேறு பூச்சூடான் என்ப.

(அ. சி.) உயர்வரை உச்சி - ஆஞ்ஞை. பாயும் - நீர் நிரம்பும், தாமரை - சகசிர அறை.

(9)

2496. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்துந் திருவுடை யோரன்றே.

(ப. இ.) ஒன்றும் இரண்டும் ஆகிய மூன்றும் முக்கரணங்களாகும். அவை முறையே உள்ளம் உரை உடலென்ப. இவற்றை மனமொழி மெய்களென்ப. இம் மூன்றும் தம்வயப்பட்டு ஒடுங்கிய காலத்து எந்நிலத்து நின்றாலும் இருந்தாலும் புலன் வென்றிருந்து புகழ் மெய்ப் பொருளை நாடுவர். அவர்கள் சென்றும் இருந்தும் சிவத்திருவுடையாரே யாவர்.

(அ. சி.) ஒன்றுமிரண்டும் - முக்கரணங்களும். வென்று - புலனை அடக்கி ஒருங்கிய - ஒத்திருக்கின்ற.

(10)


22. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி

2497. தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் 2சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.


1. எட்டு. அப்பர், 5. 54 - 1.

(பாடம்) 2. சிற்சொலிதை.