1022
 

(ப. இ.) ஆருயிர்களின் தெளியாத சிந்தை தெளியும் பொருட்டு மாறுபட்டவற்றைப் படைத்துத் தாந்தாம் உய்த்துணர்ந்து தெளியுமாறு தெளிவித்தருளினன். அவை ஒன்றோடொன்றொவ்வா ஒரே துன்பமாயிருக்கும் இருளுலக நரகமும், ஒரே இன்பமாக இருக்கும் ஒளியுலகமாகிய துறக்கமும் நிலவுலகின்கண் செய்துகொண்ட இருவினைப்பயன் வழியாக எய்துவன. அவ் வுயிர்கள் எஞ்சிய வினைக்கு நிலத்தின்கண் மீண்டும் பிறக்கும். இவற்றைச் சிவபெருமான் அருளால் அமைத்தருளினன். இவற்றைச் சிறப்பாகத் தெளியார் உயிர்நிலைக்களமாம் உடல்பெற்றது மேலும் பிறக்கும் வினைசெய்தற்கேயாம். அவ் வுடல் கொடுத்தது இதன் பொருட்டன்று; சிறக்கும் பணி செய்தற் பொருட்டேயாம். வேறா - சிறப்பாக.

(அ. சி.) வேறா - மாறுபட்ட.

(8)

2505. ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலு நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.

(ப. இ.) ஒன்ப (2498) தென்னும் பாடாகிய அவத்தையுள் ஒன்பான் (2497) அபிமானி என்னும் பொருவில் பற்றினர் உளர். இவர்களே அதி தெய்வமாவர். நல்ல முறையாகப் பயிலப் பெறும் ஒன்பது (2503) மெய்களும் உள. இவற்றுடனெல்லாம் ஆருயிர்ச் செயலறல், ஆரருட் செயலறல், பேரருட் செயலறல் என்னும் முத்துரியமும் பொருந்தும். இங்ஙனம் பொருந்து மாறருளிப் பொருந்தி நிற்பவன் சிவன். அவனே செம்பாற் சிவன்: செம்பொருட் சிவன்; இவ் வுண்மையினை மேற்கொண்டு ஒழுகுவோன் செம்பொருட்டுணிவினனாவன் அவனே சித்தாந்தச் செல்வன். அவன் நீங்காச் சிவ நினைவால் ஓங்கும் சிவமாவன். அந் நிலையே சித்தாந்த சித்தியாகும். சித்தாந்த சித்தி எனினும் திருவடிப்பேறு எனினும் ஒன்றே.

(அ. சி.) அபிமானி - அதிதேவதை. முத்துரியம் - சீவ, பர. சிவதுரியங்கள். செம்பாற் சிவம் - செம்மையுடைய சிவம்.

(9)


23. சுத்தாசுத்தம்

2506. நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது 1வாகுமே.

(ப. இ.) நாசி நுனியினின்றும் புறப்பட்டு வெளிப் போதரும் உயிர்ப்புப் பன்னிரண்டு விரலளவு வரையில் ஓடும். அங்ஙனம் ஓடும் அவ்


1 மறையினால். சிவஞானசித்தியார், அவையடக்கம் - 4.