யென்னும்படி நின்றன.புணர்வு நிலைக்கு வந்தபின் அவ்வுயிர்கட்குப் புரிவு நிலையும் உண்டுகொல் என்று ஐயுறவு ஏற்படுவதாகும். ஏனைப் பொருள்களைப் போன்று சுட்டுணர்வு சிற்றுணர்வுகட்கு எட்டுவதன்று. அத் திருவடிப்பேறு. மானிடர்கள் திருவடிப் பேற்றினைக் கண்ட அறிவு உண்டு எனக் கூறுவராயின் அஃது உண்மைச் சிறப்பியல்பாக இருத்தல் ஒண்ணாது அத் திருவடிப் பேறு சொல்ல ஒண்ணாத ஆருயிர் அகத்தமர்ந்த அறிவுப் பேரொளியாகும். (அ. சி.) உண்டில்லை - உலகம் உண்டு உலகம் இல்லை என்று வாதாடும் உலகத்தில். பண்டு - கேவல நிலை. பரம் கதி - மேலான முத்தி நெறி. கண்டில்லை மனிடர்-இதுவரை காணாத மானிடர். கண்ட கருத்து - அறிந்த அறிவு. விண்டில்லை - உரைக்க வேண்டியதில்லை. (13) 2645. சுடருற ஓங்கிய ஒள்ளொளி யாங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையி னாரிருள் வீசில் உடலுறு ஞானத் துறவிய னாமே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் ஒளிக்கு ஒளியாய்த் திகழும் அறிவொளியாவன். அவன் அகவொளியாய்த் தொடர்புற்றுக் காட்சியளிக்கும் உணர்வொளிப் பகலவனும் ஆவன். திருவருளால் பல்வேறு பிறப்பினுக்கு வாயிலாக நின்று அடரும் மாயையின் நிறைந்த இருள் நீங்கப்பெறுதல் வேண்டும். அங்ஙனம் நீங்கினால் உடற்கண் பொருந்தியமாறில் மெய்யுணர்வுமேலோன் சிவபெருமானாவன். அவனே திருவடியுணர்வின் உறவுடையோன் ஆவன். ஞானத்துறவியன்-ஞானத்தால் துறவியன் என்றலும் ஒன்று. (அ. சி.) பகலவன் ஈசன் - ஞான சூரியனாகிய ஈசன். வீசி - விலக்கி. உடலுறு - மாயா சம்பந்தமான அஞ்ஞானத்தோடு மாறுபடுகின்ற. (14) 2646. ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்செம்பொன் ஆதிப் பிரானுங் களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி ஒளிபவ ளத்தென்னோ டீசன்நின் 1றானே. (ப. இ.) மிக்க ஒளிசேர் பவளத் திருமேனியை உடையவன் சிவபெருமான். மணிகள் ஒன்பதினுள்ளும் முத்தும் பவளமும் நத்தும் கடலகத்துத் தோன்றுவன. நீரில் தோன்றும் தாமரை பூவுட் சிறந்தது போன்று நீரில் தோன்றும் முத்தும் பவளமும் மணியுள் சிறந்தனவாகும். முத்து சிவபெருமானின் ஆரறிவையும் பவளம் அளவி லாற்றலையும் குறிக்கும் குறிப்பினவாகும். ஆற்றலாகிய திருவருளே அவன் திருமேனியாகலின் பவளமேனியன் என்றோதினர். திருவெண்ணீற்றுப் பூச்சினன் முதிர்ந்த பவளத்தையும் செம்பொன்னையும் போன்ற ஆதிப் பிரானாகிய சிவபெருமான் ஆருயிர்கட்கு மிக்க களிப்பினை யுண்டாக்குவன். அங்ஙனம் உண்டாக்குவதில் அவன் மெய்யுணர்வுப் பகலவனாவன்.
1. வனபவள - அடர்ப்பரிய. அப்பர், 4. 6 - 1, 10.
|