1089
 

என்றும் நின்றருள்பவனும் சிவனே. அத்தகைய சிவபெருமான் திருவடியிணையினைப் பரவுவோமாக. பரனா என்பது பானா என நின்றது. பானுவாக என்பது பானாக என நின்றது என்றலும் ஒன்று. இதற்குச் சிவஞாயிறாக எனப்பொருள் கொள்க.

(அ. சி.) இருக்கு - தமிழ் மொழியில் உள்ள இருக்கு முதலிய வேதங்கள். அவற்றின் தலைவன் - சிவன். வானாய் - வியாபகமாய் பானாயிருக்க - பரவி இருக்க.

(17)


5. தூல பஞ்சாக்கரம்(பரிய ஐந்தெழுத்து)

2649. ஒன்றுகண் டேனிவ் வுலகுக் கொருகனி
நன்றுகண் டாயது நமச்சிவா யக்கனி
மென்றுகண் டாலது மெத்தென் றிருக்குந்
தின்றுகண் டாலது தித்திக்குந் 1தானன்றே.

(ப. இ.) உலகிடைவாழும் திருவடிப் பேற்றிற்குரிமையுடைய மக்களுயிர்க்குத் திருவருளால் ஒப்பில்லாத அவ்வையுண்ட அருநெல்லியினும் செவ்விதாகவுள்ள ஒப்பில் ஒரு கனியினைத் தப்பின்றிக் கண்டு கொண்டுள்ளேன். அக் கனி தீயதில்லாத நன்றுடையதாகும். அக்கனியின் திருப் பெயர் 'நமசிவய' வாகும். (2588 2993) அத் திருக்கனியினை உணர்வின்கண் கணித்தலாகிய மெல்லுதலைச் செய்வார்க்கு அஃது அனிச்ச மலரினும் மெல்லிதாக அமைந்திருக்கும் அதன்கண் அழுந்தியறிதலாகிய தின்றலைக் கண்டார்க்குத் தெவிட்டா இனிப்பாய்ச் சிறப்பாய் விளைந்து தித்திக்கும் தித்திக்கும் - இனிக்கும். அழுந்தியறிதல் - அனுபவித்தல்.

(1)

2650. அகார முதலாக ஐம்பத்தொன் றாகி
உகார முதலாக வோங்கி யுதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதா 2மம்மே.

(ப. இ.) உலகிடை உயிர்ப்பாய் வழங்கும் தொன்மை மொழிகள் பலவற்றுள்ளும் நனிமிகத் தொன்மை வாய்ந்தது நம் தாய்மொழியாகிய


1. மனிதர்கள் அப்பர், 5. 91 - 7.

" குறித்தடியி. சிவஞானசித்தியார், 9. 2 - 1.

" ஒருமணியை. அப்பர், 6. 46 - 5.

" தெள்ளத்." 5. 91 - 9.

" உழப்பின். 11. பட்டி - திருவிடை, 10.

2. ஞானமெய்ந். 12. சம்பந்தர், 1248.

" நந்திநாம. சம்பந்தர், 3. 49 - 11.