1224
 

20. அணைந்தோர் தன்மை

2917. மலமில்லை மாசில்லை மானாபி மானங்
குலமில்லை கொள்ளுங் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி யன்பிற் பதித்துவைப் 1போர்க்கே.

(ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமானை நந்தி யெனவும் அழைப்பர். அவனை அவனுடைய திருவடி ஞானத்தினாலே பேரன்பு பெருகி அவ் அன்பும் எத்திறத்தானும் மாற்றொணா உறுதியுடைத்தாய்க் கொண்டு மனத்தில் பதித்தல் வேண்டும். அப்படிப் பதித்து வைப்பார் சித்தாந்த சைவச் செந்நெறி யுலகத்துச் சீரியோராவர். அவர்கள் ஏனை யுலகோர் கட்டிக் கூறும் பொய்ந்தூல் = ஒழுக்கங்களைப் பெரிதெனக் கொள்ளார். அந்நிலையே, 'அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை' என்னும் நிலையாகும். அவர்களுக்கு 1. ஒன்றாய் மூன்றாய் ஐந்தாய் விரிந்து பிணிக்கும் மலமில்லை. 2. அகம்புறம் தூயராதலின் மாசில்லை. அகத்தே ஐந்தெழுத்தும் புறத்தே திருவெண்ணீறும் சிவமணியும் கொள்ளுதலால் அகம்புறம் தூய்மையாகும். 3. ஒழுக்கம் பற்றாது கட்டுப்பாடு பற்றித் தோன்றும் மானாபிமானமில்லை. 4. உலகோர் வகுத்த ஒவ்வாக் குலமில்லை. 5. ஏனையோர் கொள்ளும் முக்குணங்களும் இல்லை. 6. தந்நலமில்லை. இவை யாறும் அற்றவரே அற்றவராவர். 'அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்'றாரும் ஆவர். அபிமானம் - பற்று. சிவமணி: கடவுட் கண்மணி; உருத்திராக்கம்.

(அ. சி.) பலமன்னி - உறுதியாக அடைந்து.

(1)

2918. ஒழிந்தேன் பிறவி யுறவென்னும் பாசங்
கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன்
2அழிந்தாங் கினிவரு 3மாக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் 4டேனே.

(ப. இ.) 'சார்பினால் தோன்றாது தானருவாய் எப்பொருட்கும், சார்பென நின் றெஞ்ஞான்றும் இன்பந்தகைத்'தாக விருப்பவன் சிவபெருமான். அன்பு நாவாகவும் இன்பு தேனாகவும் கொள்ளுதல் வேண்டும். அன்பும் இன்பும் ஒன்றானால் ஆரா அருஞ்சுவை உண்பாம். உண்பே அனுபவம். அனுபவம் - அழுந்தியறிதல். அத்தகைய செழுஞ்சார் புடைய சிவனை அவன் திருவடியுணர்வரல் திருவருள் தர உணர்வினுள் உணர்வாய்ப் புணர்ந்து நின்றுணர்ந்து ஓவா இன்புற்றேன். அதனால் ஒன்றாலும் ஒழிக்க வொண்ணாத எல்லையில் பிறவித் தொல்லையை ஒரு


1. ஞாலமதில். சிவஞானசித்தியார், 8. 2 - 22.

" அகனமர்ந்த. சம்பந்தர், 1. 132 - 6.

(பாடம்) 2. இழிந்தாங்.3. மார்க்கமும்.

4. அவனே தானே. சிவஞானபோதம், 10.

" வேண்டேன். 8. உயிருண்ணிப் பத்து, 7.

" நிற்பனவு. அப்பர், 6. 98 - 7.