கிட்டாது. திருவருளை இங்குப் பெண்ணாக உருவகித்தார். சரிவளை முன்கை அகத்தவமாகிய யோகப் பயிற்சி. சந்தனக் கொங்கை தவப் பயனாம் விந்து எனப்படும் ஒளியமிழ்து கைச்சி - கையை உடையவள். (7) 812. ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில் விண்ணார்ந்த கங்கை1 விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே. (ப. இ.) அரிய பெரியவர்கட்கல்லாமல் ஏனையார்க்கு இயற்ற ஒண்ணாத இப் பரியங்க யோகத்தைப் பயின்று வெளிப்படுத்தியவர் சீகண்ட முதல்வராவர். ["சீகண்ட உருத்திரன் அயன்மால் போலச் சகலரினன்றிப் பிரளயாகலரிற் பக்குவமுடையோனாய்க் கட்டு நீங்கி முத்தி பெற்ற கடவுளாகலானும், பரமசிவனுக்குரிய எல்லாப் பெயர்களும் வடிவமும் தொழிலும் பெற்றுடையன்," மெய்கண்டார் தமிழ் சிவஞான முனிவரனார் பேருரை] இவர் நடப்பாற்றலாகிய சலமகளை (கங்கை)த் திருச்சடையில் வைத்தவர். வேறொன்றும் எண்ணாது ஐந்து நாழிகை பரியங்கம் பயின்றவர் இருந்தபடியே இருந்து இன்புறுவர். கங்கை - சலமகள்; (திரோதான சத்தி) நடப்பாற்றல். (8) 813. ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம் வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே.2 (ப. இ.) இப் பரியங்க யோகப் பயிற்சிக்குரிய அகவை பெண்களுக்கு இருபதும், ஆண்களுக்கு முப்பதுமாகும். இந்த யோகம் கை வந்தவர் இடையறாப் பேரின்பம் எய்துவர். இவர்கள் உடனுறைந்து வாழினும் ஐம்புலன் மலர எண்ணம் (சித்தம்) இடம் பெறினும் வெள்ளிக்குச் சோர்வில்லை என்க. வெள்ளி - விந்து. திருநீலகண்டக் குயவனாரும் அவர்தம் கற்புறு மனைவியாரும் பிரிவின்றி உடனாயிருந்தும் உடனுறை வின்மையராய்ச் சிவயொகியராய் வாழ்ந்தனர். அம்மட்டோ, 'அற்புறு புணர்ச்சியின்மை அயலறியாமை வாழ்ந்தார்.' அவர்தம் செப்பரும் வாழ்க்கையின் வாய்மைச் சிறப்பு இதற்கு எடுத்துக்காட்டாகும். (அ. சி.) ஏய்ந்த..முப்பதும் - பரியங்கி யோகம் பயில் பெண்களுக்கு 20 வயதும் ஆடவர்க்கு முப்பது வயதும் ஆம். வெள்ளி - விந்து; சுக்கிலம். (9)
1. இனைய பல. சிவப்பிரகாசம், 30. " மலைமகளைப். அப்பர், 6. 78 - 2. " மலைமகளை. 8. திருச்சாழல், 7. 2. கற்புறு, இளமையின், இந்நெறி. 12. திருநீலகண்டக் குயவர், 8 - 10. " தென்னாவ. 12. தடுத்தாட், 181.
|