யுணர்வர். அவ்வுணர்வால் முதன்மையான செந்நெறிச் செல்லும் மேன்மை எய்தும். (அ. சி.) எழுத்து - இலக்கணம், நூல். பாடல் - இலக்கியங்கள். எண்ணெண் கலை - 64 கலைகள். பழித்தலை : பழிச்சலை என்பதன் திரிபு; படிக்காவிட்டால். வழித்தலை - தலைவழி; முக்கிய நெறி. சோமன், அங்கி, அருக்கன் - இடகலை, பிங்கலை, சுழுமுனை. வருத்தலைச் செய்யும் - பிராணாயாமம் செய்யும். (5) 1435. விரும்பிநின் றேசெயில் மெய்த்தவ ராகும் விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே.1 (ப. இ.) சிவத்தை விரும்பிநின்றே செயல் செய்யும் நல்லோர் உண்மைத் தவத்தவராவர். அவ்வாறே ஒழுகின் குருவருள் அருமறை கைகூடும். அதுபோல் செய்யின் அஃது இறப்பில் தவமாகிய உண்மைத் தவமாகும். மேலும் கைக்கொளின் தூய விண்ணுலக நேராட்சியுடைய சிவனென மதிக்கப்படுவன். (6) 1436. பேணிற் பிறவா உலகருள் செய்திடுங் காணில் தனது கலவியு ளேநிற்கும் நாணில் நரக நெறிக்கே வழிசெயும் ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.2 (ப. இ.) அகத்தவமாகிய யோகநெறியினைப் பேணி ஒழுகுவார் மீண்டும் பிறப்பதற்கு வாயிலில்லாத தூய சிவவுலகை எய்துவர். இவ்வுலகே பிறவாவுலகெனப்படும். அருட்கண்ணாற் காண்பார் சிவபெருமான் வேறறக் கலந்து நிற்கும் கலவியுள் நிற்பர். இத்தவ ஒழுக்கிற்செல்ல நாணமுறுவார் இருளுலகெய்தி இன்னலுறுவர். சிவன் உடம்பினுள் அவ்வுடம்பு நிலைத்துநிற்பதற்குவேண்டும் சூட்டினையருள்வன். அத்தகைய சிவபெருமானே சார்ந்தாரைக் காக்கும் தலைவனாவன். (அ. சி.) பிறவா உலகு - சிவலோகம். தனது கலவியுளே - சீவனிற் கலந்தே.. நாணின் - யோக மார்க்கத்தை நாணத்தால் விட்டுவிட்டால். நரக நெறி - பாப மார்க்கம். ஊனிற் சுடும் சரீர துன்பத்தைக் கொடுக்கும். அங்கி உத்தமன் - தீ வடிவனான சிவன். (7) 1437. ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர் எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்த னிவனென்றே அன்புறு வார்களே.3
1. வித்தையோ. சிவஞானசித்தியார், 1. 3- 7. 2. சார்ந்தாரைக். சிவஞானபோதம். " உருத்திரனை. அப்பர், 6. 90 - 5. 3. நார. அப்பர், 5. 65 - 10. " இயக்கர் "" 97 - 25.
|