(ப. இ.) எம்மை ஆளும் பெருமானாகிய அழிவில் செல்வனை முப்பத்து முக்கோடி என வரையறுக்கப்பெறும் அளவிலாத தேவர்கள் மணம் கமழ்கின்ற இளம்தென்றலாகக் கருதப்படும் காற்றும் ஏனைப் பூத நான்கும் ஐந்து திருவுருவில் வைத்து வழிடுகின்றனர். அதற்கு மேலுள்ள அருவுருவத் திருமேனியையேனும், அருவத் திருமேனியையேனும். அத்தேவர்கள் அறியார். சிவன் இம் முத்திற்த் திருமேனிக்கும் அண்டங்களுக்கும் அப்பால் விளங்கும் இயற்கை உண்மை உணர்வுத் திருமேனியை அத்தேவர் எங்ஙனம் உணருவர்? (அ. சி.) வாசப் பசுந்தென்றல் வள்ளல் என்று - பஞ்சபூதங்களையே தன்னுருவாக்கொண்ட சகுண பரசிவத்தை. வாழ்த்தினர் - தேவர் பூசித்தனர். அண்டங்.....யாரே - நிர்க்குண சிவத்தைத் தேவர்கள் அறியார். (4) 1687. ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி ஒன்சுட ரான இரவியோ டிந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள் தண்சுட ராயெங்கும் தற்பர மாமே. (ப. இ.) ஒளிசேர் தீ, அயன், மால், படைப்புத் துணையாம் ஒன்பான் படைப்போர் (பிரசாபதி), ஒண்சுடரான ஞாயிறு, வானவர் கோன் முதலிய தேவர்களுக்கும் அவர்களுடன் கலந்து உள்நின்று உணர்த்துவோன் சிவன். எங்கும் நிறைந்து குளிர்ந்தருள் செய்பவனும் அவனே. (அ. சி.) ஒண்சுடர் - அக்கினி. தண்சுடர் - சந்திரன். (5) 1688. தாபரத் துண்ணின் றருளவல் லான்சிவன் மாபரத் தண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும் பூவகத் துள்நின்ற பொற்கோடி யாகுமே.1 (ப. இ.) அறிவில் பொருளாகிய மண் முதலியவற்றினின்றும் சிவபெருமான் வழிபடுவோர்க்கு அருள்புரிவன் சிவன். அவன் முழுமுதற் கடவுளாவன். அத்தகைய மெய்ப்பொருளை வழிபடுவாரில்லை. அவ்வுண்மையோர்ந்து வழிபடுவார்க்கு உச்சியின் மேற் காணப்படும் ஆயிர இதழ்த் தாமரையின்கண் வீற்றிருந்தருளும் திருவருள் அம்மையின் பேரருள் உண்டாம். (அ. சி.) தாபரம் - அசரப் பொருள்கள். மாபரம் - பொருமையுள்ள சிவம். பூவகம் - சகசிர மலர். பொற்கொடி - சிவ சத்தி (6) 1689. தூய விமானமுந் தூலம தாகுமால் ஆய சதாசிவ மாகுநற் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரணிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
1. தாபர. சிவஞானசித்தயார், 2. 2 -25.
|