926
 

ஒழுகுவது. ஊன்றி நின்று நிலைப்பதல்லாத உள்ளொளிக்குள் ஒளியாய் சிவஒளி தோன்றும்.

(அ. சி.) மான்றும் - மயங்கியும்.

(19)

2284. அறிகின்றி லாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை யறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென் றருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென் றறிந்துகொண் 1டேனே.

(ப. இ.) தாமே அறியுந் தன்மையில்லாத முப்பத்தாறு மெய்களும் ஆருயிரால் அறிகின்றன. அவ் வுண்மையினையும் அறிகின்ற என்னையும் அறியாதிருந்தேன். சிவபெருமான் அறியும் தன்மை உனக்குள்ளதென்று அருளால் அறிவித்தான். அதனால் நான் அறிகின்றேன் என்று அறிந்து கொண்டேன். இதன்கண் நம்மூலர் தம் முன்னிலையினை ஓதி யருள்கின்றனர்.

(அ. சி.) ஐ ஏழும் ஒன்றும் - 36 தத்துவங்களும்.

(20)

2285. தானவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமின் ஞானத்தி னின்னருட் சத்தியை
ஊனமி லாள்தன்னை யூனிடைக் கண்டதே.

(ப. இ.) மேலோதியவாறு விளக்க விளங்கும் அறிவுள்ளது உயிரென உணர்ந்தோன் இரும்பைப் பொன்னாக்கும் இயைபுபோல் தன்னை அவனாக்கும் ஞானத்தலைவன் சிவன் என்பன். சிவவுலக வாழ்வினர்க்கு முதல்வனும் அவனே. அளவிடப்படாத மாமணியாகிய செம்மணிச் சோதியை, மாசிலா மெய்யுணர்வை நல்கும் இனிய வனப்புமிகும் நல்லருளாற்றனும் அவனே. ஒருஞான்றும் முழுமுதற்றன்மையில் ஏதும் குறைபாடில்லாத சிவரெுமானை இவ் வுடம்பகத்தே அவன் காட்டக் கண்டுகொண்டேன் என்க.

(21)

2286. ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளுந் தெருளுங் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே.

(ப. இ.) சிற்றறிவாகிய ஒளியும், ஆணவமாகிய இருளும், இவற்றை விளக்கும் நடப்பாற்றலாகிய பரையும், அத் திருவருளால் தலையளிக்கத்தக்க ஆருயிரும் அருளால் உணரலாகும். அதன்மேலும் தலையளிப்பையும், அதனைப் புரியும் அருளையும், அவ் வருளால் எய்தும் தெருளையும் கடந்து திருவடியைத் தெளியத் துணைபுரியும் வனப்பாற்றலாகிய திருவருளே சிவப்பேரின்பம் ஆகும்.

(22)


1. வந்தெனுடல். தாயுமானார், ஆகார புவனம். 18.

" அறியாமை. " உடல் பொய்யுறவு. 22.