1079
 

ஆகிப்பின் மெய்யடியார்கள் தங்கள் நன்னாவால் திருமுறைபாடி வணங்கும்படி எழுந்தருளி இருப்பவனும் அவனே. அவனை வணங்கும்படி ஆரருள்புரிந்தவன் நந்தி. நந்தியின் முந்திய திருவருளால் உள்ளம் தெள்ளத்தெளிந்த வெள்ளரானோம். கள்ளமகன்றோம். கொள்ளோம் கனவிலும் செத்துப் பிறந்து சிறுமையுறும் சிறுதெய்வ வணக்கம். அத்தெய்வங்களெல்லாம் தொழும் தன்மையான் சிவபெருமான். அவன் திருவடிக்கீழ் அவனருளால்புக்கு அவனாகத் திகழ்ந்தனம். இதனைப் 'பிறவாப் பெருந்தெய்வம் பேணுசிவன் ஏனோர். பிறப்பாற் சிறுதெய்வம் பேசு' என்பதனால் நினைவு கூர்க.

(அ. சி.) கோ - பசு - ஆன்மா. கோவணமாகி - ஆன்மாக்களின் உருவந் தாங்கி. நாவணங்கும்படி - நாவால் துதிக்கும்படி. தேவணங்கோம் - வேறு தேவரை வணங்கோம். சத்தம் - பத்துவித நாதங்கள். வணங்கும் பொருளாய் - சிவமாய்.

(18)


3. பிரணவ சமாதி
(ஓங்காரத் தொடுக்கம்)

2626. தூலப் பிரணவஞ் சொரூபானந் தப்1பேர்
பாலித்த சூக்கும மேலைச் சொரூபப்பெண்
ஆலித்த முத்திரை யாங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

(ப. இ.) பாரிய ஓமொழி தூலப் பிரணவமாகும். அதனால் பெறுவது பருவுடலின்பம். நுண்மை ஓமொழி நுண்ணுடற்குரிய இன்ப வாயிலாகும் மேலைச் சொரூபம் என்னும் இன்ப ஓமொழி காரணப் பிரணவமாகும். அது திருவருள் வீழ்ச்சிக்கு வாயிலாகும். அப் பிரணவம் கைக்குறியாம் முத்திரை வடிவாக விருக்கும். மாமுதல் ஓமொழி மேலைப் பிரணவமாகும். இதுவே மாகாரணமெனவும் சொல்லப்படும். இது திருவடியுணர்வாம் வேதாந்த வீதியில் சேர்ப்பதாகும்.

(அ. சி.) தூலப் பிரணவம் தூல சரீரத்துக்கு ஆனந்தமும், சூக்குமப் பிரணவம் சூக்கும தேகத்துக்கு (மேலைச் சொரூபம்) ஆனந்தமும், காரணப் பிரணவம் திருவருட்சத்தி பதியச் செய்தலும், மகாகாரணப் பிரணவம் (மேலைப் பிரணவம்) வேதாந்த வீதியில் சேர்த்தலுஞ் செய்யும்.

(1)

2627. ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி
ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு
ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி 2சித்தியே.


(பாடம்) 1. பேருரை.

2. கரும்பினு. அப்பர், 4. 74 - 3.

" ஒருசுடராய், " 6. 39 - 10.